• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் முன்மாதிரி தொகுதியாக மாற்றியமைக்கப்படும் – டாக்டர் ஆர். மகேந்திரன்

March 19, 2021 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத்தலைவரும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான டாக்டர் ஆர் மகேந்திரன், சிங்காநல்லூர் தொகுதியின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், சிங்காநல்லூர் முன்மாதிரி தொகுதியாக மாற்றியமைக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத்தலைவரும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான டாக்டர் ஆர் மகேந்திரன் சிங்காநல்லூரின் அடிப்படை மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், சிங்காநல்லூர் மற்ற தொகுதிகளுக்கு ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றியமைக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

சிங்கநல்லூர் வார்டு- எண்: 57, 60, 61, 63 -ல் உள்ள முக்கிய பகுதிகளான ஜி.வி.ரெசிடென்சி, மசகாளிபாளையம் பஸ் ஸ்டாண்ட், பாலன் நகர், ஹோப்ஸ் காலேஜ், காமராஜர் சாலை, கள்ளிமடை, நந்தா நகர், நெசாவலார் காலனி, எஸ்எம்எஸ் லே அவுட், ஒண்டிப்புதூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக பிரச்சாரம் செய்த அவர்,வார்டு வாரியான முன்னேற்றங்களைக் கொண்டுவருவோம் என்றும், சாலை, நிலத்தடி வடிகால், நீர் வழங்கல் போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் பழுதுபார்த்து மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்தார்.பொதுமக்கள் எந்த நேரத்திலும் தன்னை சுலபமாக அணுகி தங்களின் குறைகளை கூறலாம் என்றார்.

சிங்காநல்லூர் பகுதி பொதுமக்கள் மக்கள் நீதி மய்ய கட்சியின் டாக்டர் ஆர் மகேந்திரன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் படிக்க