March 18, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 4-வது நாளான நேற்று ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதன்படி மேட்டுப்பாளையம் தொகுதியில் ஒரு பெண் உள்பட 8 பேரும், சூலூர் தொகுதியில் ஒரு நபரும், கவுண்டம்பாளையத்தில் 6 பேரும், கோவை வடக்கில் 3 பேரும், தொண்டாமுத்தூரில் ஒரு பெண், ஒரு ஆண் என 2 பேரும், கோவை தெற்கில் 5 பேரும், சிங்காநல்லூரில் 2 பெண்கள் உள்பட 6 பேரும், கிணத்துக்கடவில் 4 பெண்கள் உள்பட 10 பேரும், பொள்ளாச்சியில் 6 பெண்கள் உள்பட 9 பேரும், வால்பாறையில் ஒரு பெண் உள்பட 5 பேர் என மொத்தம் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 92 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.