March 18, 2021
தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்தேச புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் தமிழ்தேச புலிகள் என்ற கட்சியை துவங்கினார். இந்நிலையில்,அவர் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்அரசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.