• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒப்போ பேண்ட் மற்றும் 5ஜி எஃப்19 ப்ரோ சீரிஸ் மொபைல்கள் அறிமுகம்

March 18, 2021 தண்டோரா குழு

ஒப்போ, சமீபத்திய எஃப்19 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான எஃப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் எஃப்19 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. எஃப்19 ப்ரோ சீரிஸ் உடன், ஒப்போ பேண்ட் ஸ்டைலையும் அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 48எம்பி குவாட் கேமிரா, 8எம்பி வைட் ஆங்கிள் கேமிரா, 2எம்பி போர்ட்ரெய்ட் மோனோ கேமிராக்கள், 2எம்பி மேக்ரோ மோனோ கேமிரா ஆகிய அம்சங்கள் உள்ளன என்கிறார் ஒப்போ மொபைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் தம்யந்த் சிங் கனோரியா.

2எம்பி போர்ட்ரெய்ட் மோனோ கேமிராக்கள், 2எம்பி மேக்ரோ மோனோ கேமிரா ஆகியனவும் அடங்கியுள்ளன. இந்த நான்கு கேமிராக்கள் மற்றும் இந்த சாதனத்தின் ஸ்மார்ட் 5ஜி தொழில்நுட்பம். ஒளியைத் தானாகக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலமாக, ஏஐ ஹைலைட் போர்ட்ரெய்ட் வீடியோ அம்சமானது வீடியோ போர்ட்ரெய்ட்களை மேம்படுத்துகிறது. இரவின் குறைந்த ஒளி அல்லது பிரகாசமான பின்னணி என்று எதுவாக இருந்தாலும், ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் 5ஜியில் போர்ட்ரெய்ட் வீடியோக்கள் உயிர்ப்புடன், தெளிவுடன், சமநிலையுடன், இயற்கையான சரும நிறத்தைக் காட்டும்.

டியூவல்-வியூ வீடியோ ஒரே நேரத்தில் முன்புற, பின்புற கேமிராக்களை இயக்கி உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள் என்பதையும் படம்பிடிக்க முடியும். கேமிரா குறிப்பிடத்தக்க அளவில் அசைந்து கொண்டிருந்தாலும், வீடியோவில் முதன்மையாக இருக்கும் பொருளைத் தானாக பின்தொடர்ந்து பதிவு செய்ய, இதிலுள்ள ஃபோகஸ் லாக் உதவும்.

ஒப்போ ஸ்மார்ட் 5ஜி பொருந்தக்கூடிய தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட புதிய எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிவேக பதிவிறக்கத்தையும் பதிவேற்ற வேகத்தையும் உறுதிப்படுத்துகிறது. டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் மொபைல் கேம்களை இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்ட்ரீம் செய்யலாம். இதனுள் இருக்கும் மீடியாடெக் 5ஜி டைமென்சிட்டி 800யு சிப் ட்யூவல் மோடு 5ஜி சிம்மை ஆதரிக்கிறது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான எட்டு ஆற்றல்மிக்க கோர்களையும் வேகமான மெமரியையும் அதிகபட்சமாகப் பயன்படுத்துவது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வேகமாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தும்; சிறு துளியையும் தவிர்க்காமல் இசைக்கச் செய்யும்.

லேண்ட்ஸ்கேப் மோடில் விளையாடும்போது எஃப்19 ப்ரோூ 5ஜியை எப்படி பிடித்திருக்கிறீர்கள் என்பதையோ, போர்ட்ரெய்ட் மோடில் மின்னஞ்சல்களை எப்போது சரிபார்க்கிறீர்கள் என்பதையோ பொருட்படுத்தாமல் சமிக்ஞைகளை வைத்திருக்க உகந்ததாக உள்ளது 360 ஆண்டெனா 3.0.

ஒரு வைஃபை, ஒரு 4ஜிஃ5ஜி சேனலுடன் இணைப்பதன் மூலமாக உங்களது இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்தும் ட்யூவல் நெட்வொர்க் சேனல் அம்சத்தை அளிக்கிறது எஃப்19 ப்ரோ பிளஸ் 5ஜி. ஒரு கஃபே அல்லது கான்பரென்ஸ் ஹால் போன்ற அதிக கூட்டமுள்ள இடங்களில் வைஃபை சிக்னல் மிகக்குறைவாக இருக்கும்போது, இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும்.

சீம்லெஸ் டேட்டா ஸ்விட்ச், தானாக 4ஜி அல்லது 5ஜி சிக்னல் இணைப்பை உங்கள் மொபைலுக்கு அளிக்கும். வெளியிடங்களுக்குச் செல்கையில் சிக்னல் குறைவதையோ, தாமதமாவதையோ இது மட்டுப்படுத்தும். குரோம், வாட்ஸ்அப், பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு இணக்கமானது 4ஜிஃ5ஜி சீம்லெஸ் டேட்டா ஸ்விட்ச். 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 3.5 மணி நேரம் வீடியோ பார்க்கலாம். பேட்டரி தீர்ந்துபோவதோ ஒப்போ 50 வாட்ஸ் ப்ளாஷ் சார்ஜில் கிடையாது. விரைவாக சார்ஜ் செய்து, மீண்டும் வாழ்க்கையோட்டத்திற்குள் நீங்கள் கலந்துவிடலாம்.

பின்புறத்தில் ஒன் பீஸ் குவாட் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. எஃப் சீரிஸில் அமைந்துள்ள குறைந்தபட்ச வடிவமைப்பு கருத்தாக்கத்தோடு பொருந்தும் வகையில் 4 கேமிராக்களும் ஒற்றை கொரில்லா கிளாஸ்5யினால் மூடப்பட்டுள்ளது; இது, மொபைலுக்கு நேர்த்தியை அளிப்பதுடன் தொடுவதற்கு மென்மையாக இருக்கும்.

மேலும் படிக்க