March 17, 2021
தண்டோரா குழு
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் சென்று வேட்புமனுவை கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெக்குமார் தாக்கல் செய்தார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் ம.நீ.ம சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில்,பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சைக்கிளில் வந்து தேர்தல் அதிகாரி சிவசுப்பிரமணியத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.