• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்ஸ்டாக்ஸ், ஐபிஎல்-ன் அதிகாரப்பூர்வ பங்குதாரர்ராக இணைகிறது!

March 17, 2021 தண்டோரா குழு

இந்திய ப்ரீமியர் லீக்கின் நிர்வாக கவுன்சில் – ஐபிஎல் ஜிசி, இந்தியாவின் முன்னணி மற்றும் மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் டிஜிட்டல் தரகு நிறுவனங்களில் ஒன்றான அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தை, ஐபிஎல் -ன் அதிகாரப்பூர்வ பங்குதாரர்ராக அறிவித்தது.

பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஐபிஎல், 2021 ஏப்ரல் 9 -ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் உடன் அப்ஸ்டாக்ஸ் மேற்கொண்டிருப்பது பல ஆண்டு கூட்டு ஒப்பந்த செயல்பாடாக அமையும்.

அனைத்து இந்திய முதலீட்டாளர்களுக்கும் நிதி முதலீட்டை எளிமையாகவும், நேர்மையாகவும், எல்லோராலும் வாங்க முடிகிற வகையிலும் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்குடன் நிறுவப்பட்ட அப்ஸ்டாக்ஸ், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் என இரு தரப்பினரும் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், டிஜிட்டல் கோல்ட், டெரிவேட்டிவ்ஸ் மற்றும் இடிஎஃப் ஆகியவற்றில் ஆன்லைன் முதலீடுகளை மேற்கொள்ள உதவுகிறது. டைகர் க்ளோபல் போன்ற பெரும் மதிப்புடைய தொழில்முறை முதலீட்டாளர்களின் ஆதரவுடன், அப்ஸ்டாக்ஸ் தற்போது 2.8 மில்லியனிற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படேல் கூறுகையில்,

“இந்தியன் பிரீமியர் லீக் 2021-ன் அதிகாரப்பூர்வ பங்குதாரர்ராக அப்ஸ்டாக்ஸ், இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் மிக அதிகம் பார்க்கப்படும் கிரிக்கெட் லீக்குகளில் ஒன்றாக ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும், ஐபிஎல் மற்றும் இந்தியாவின் மிக வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும் டிஜிட்டல் வர்த்தகதளமான அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்ப்பது பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக நிதி ரீதியாக யாரையும் சார்ந்திராத, தங்களது நிதி முதலீட்டிற்கான பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கும் வாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கும்” என்றார்.

இந்த கூட்டு செயல்பாடு குறித்து அப்ஸ்டாக்ஸ்-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் கூறுகையில்,

“ஐபிஎல் 2021- போட்டிகளுக்காக பி.சி.சி.ஐ உடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில், கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அதையும் தாண்டி நம்முடைய கலாச்சாரத்தின், சமூக வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது., குறிப்பாக இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறையினரால் அதிகம் நேசிக்கப்படும் ஒன்றாக கிரிக்கெட் கணக்கிலடங்கா ரசிகர்களைப் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் நிதி முதலீட்டு மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் அப்ஸ்டாக்ஸ்-ஐ போலவே, ஐபிஎல் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு கம்பீரமான புதிய திசையை உருவாக்கியுள்ளது. இந்த உத்வேகம்தான் எங்களது இரண்டு ப்ராண்ட்களுக்கும் இடையே ஒரு இயற்கையான தொடர்பைத் தூண்டியிருக்கிறது எனலாம். விளையாட்டு மற்றும் நிதி இவையிரண்டின் ஒருங்கிணைப்பின் மூலம், நாடு முழுவதும் நிதி சார்ந்த விழிப்புணர்வை பரப்ப உத்தேசித்துள்ளோம்.” என்றார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக, பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பிரபலமான ஒரு ப்ராண்ட், இத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெரியளவில் பங்குதாரராக கைக்கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க