• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார் டாக்டர் மகேந்திரன் !

March 15, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் மகேந்திரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.இதையொட்டி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேந்திரன்,

கோவை தெற்கு தொகுதியில் 2 மணிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் அறிக்கை இந்த வார கடைசியில் வெளியிட உள்ளோம். கொங்கு மண்டலத்தில் மநீமவிற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

மேலும் கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் மக்களிடம் தங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. மாறி மாறி மக்கள் ஓட்டு போட்டியிருந்தாலும், யாரும் எதுவும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாற்றத்திற்கான வேட்பாளராக இருப்பேன் எனவும், அதிமுகவின் இலவச திட்டங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க