March 13, 2021
தண்டோரா குழு
கோவை கே.ஜி.நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் மகளிர் மற்றும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஏஞ்சல் வீராங்கனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.நர்சிங் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா,கே.ஜி.மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் பக்தவத்சலம் எழுதிய ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா எனும் நூல் வெளியீட்டு விழா,மற்றும் கொரோனா கால நேரத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஹரே கிருஷ்ணா அரங்கில் நடைபெற்றது.
கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் அசோக் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் கலந்து மருத்துவர் எழுதிய 13 வது நூலை வெளியிட்டு பேசினார்.இதில் சிறப்பு அழைப்பாளர்கள் விஜயா பதிப்பகம் வேலாயுதம்,அண்ணா ஐ.ஏ.எஸ்.அகாடமியின் இயக்குனர் முனைவர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மகளிர் தின விழாவை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர்க்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதில் பெண் வழக்கறிஞர் மாலதி,தொழில் முனைவோர் உமா மகேஸ்வரி,கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா,ஆகியோர் விருதுகள் வழங்கி கவுரிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து கே.ஜி.மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ஏஞ்சல் வீராங்கனைகள் விருது வழங்கப்பட்டது.விழாவில் கல்லூரி முதல்வர் சோனியா தாஸ் உட்பட பேராசிரியைகள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.