March 13, 2021
தண்டோரா குழு
வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும் என கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் பையா ஆர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்த அவருக்கு தி.மு.க.கட்சியினர் திரளாக வந்து வாழ்த்து தெரிவித்து,சிறப்பான வரவேற்பு அளித்தனர்.,
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும்,எனவும் அனைத்து தொகுதிகளும் திமுக வசமாகும், என தெரிவித்த அவர், கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று தலைவருக்கு வெற்றிக்கனி அளிக்க உள்ளேன், தமிழகத்தில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார் இந்த நிகழ்ச்சிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டார்.