March 13, 2021
தண்டோரா குழு
கோவையை அடுத்த அன்னுரில் இயங்கி வரும் பழுதடைந்த இடிந்து விழும் நிலையில் உள்ள தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவையை அடுத்த,அன்னூர் பகுதியில் தென்னம்பாளையம் மெயின் ரோடு , கிருஷ்ணா ஜின்னிங் பேக்டரி அருகில் இயங்கி வரும் பழுதடைந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் இயங்கி வரும் அலுவலகத்தை இடம் மாற்றக் கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
மனுவில் இந்த பகுதியில் இயங்கி வரும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் உள்ள கட்டிடம், கடந்த 65 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் இந்த கட்டிடத்தில் தபால் அலுவலகம் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது . மேற்படி கட்டிடமும் , அதனருகில் உள்ள கட்டிடங்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பொது மக்கள் தங்களுடைய சேமிப்பு கணக்கு மற்றும் கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கும் இந்த கட்டிடத்திற்கு செல்லும், நிலையில் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து ஆபத்து ஏற்படுமோ என்று பயந்து கொண்டும் பொது மக்கள் மிகவும் மனவேதனைக்கு உட்பட்டு வருகிறார்கள் . ஆபத்தான கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டால் உடனே காலி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டும் , மேற்படி போஸ்ட் ஆபீஸில் வேலை செய்யும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மேற்படி கட்டிடத்தை காலி செய்யாமல் செயல்பட்டு வருவதாகவும்,எனவே ஆபத்தான நிலையில் இயங்கி வரும் தபால் அலுவலகத்தை இடம் மாற்ற செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பழுதான கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டிருந்தும் அரசு அலுவலகமான தபால் அலுவலகமே இது போன்ற ஆபத்தான கட்டிடத்தில் செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.