March 13, 2021
தண்டோரா குழு
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்,
திமுக தேர்தல் அறிக்கைதான் எப்போதும் தேர்தலில் கதாநாயகன்.சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
பொங்கல் பண்டிகை தமிழர் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ3 குறைக்கப்படும்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ5 குறைக்கப்படும்.டீசல் விலை லிட்டருக்கு ரூ4 குறைக்கப்படும்.எரிவாயு சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்படும்.500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்.
நியாய விலைக் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்.அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதிக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும்.சொந்தமாக ஆட்டோ வாங்க பத்தாயிரம் ரூபாய் மானியம்.மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். கிராமப்புற பூசாரி ஊதியம் உயர்த்தப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் ஆக உயர்வு.
பள்ளி மாணவர்களுக்கு இலவச TAB வழங்கப்படும்.உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு திட்டம்.சிறு குறு வணிகர்களுக்கு 15,000 ரூபாய் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும். கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க முயற்சி செய்வோம்.பழங்குடியின பட்டியலில் மீனவ சமுதாயம் சேர்க்கப்படும்.
சென்னையை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.சொத்துவரி அதிகரிக்கப்படாது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம். பொங்கல் தமிழர் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்.இந்து கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல தலா 25,000 மானியம் வழங்கப்படும்.
தமிழகத்தில் 75% வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு தர சட்டம் நிறைவேற்றப்படும். மேலும் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். 30 வயதுக்குட்பட்டவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்.
இயற்கை வேளாண்மைக்கு என தனி பிரிவு ஏற்படுத்தப்படும். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லையில் மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும்.
அரசு பள்ளகளில் காலையில் மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக பால் வழங்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் முறையான பயிற்சிப் பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம்.