March 12, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து முககவசம் அணியதாவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.அதன் படி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முககவசம் அணியதாவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.அதன்படி கோவை வடக்கு மண்டலத்தில் 29 பேரிடம் இருந்து ரூ 5 ஆயிரத்து 800, கிழக்கு மண்டலத்தில் 64 பேரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 800, தெற்கு மண்டலத்தில் 27 பேரிடம் இருந்து 5 ஆயிரத்து 400, மேற்கு மண்டலத்தில் 24 பேரிடம் இருந்து ரூ. 4 ஆயிரத்து 800, மத்திய மண்டலத்தில் 40 பேரிடம் ரூ. 8 ஆயிரம் என மொத்தம் ரூ.36 ஆயிரதம் 800 அபராதம் வசூல் செய்யப்பட்டது.