March 12, 2021
தண்டோரா குழு
கோவை – போத்தனூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும் 15 மற்றும் 17ம் தேதிகளில் 5 கோவை ரயில்கள், போத்தனூர் இருகூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை – போத்தனூர் இடையே ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகளால், வரும் 15 மற்றும் 17ம் தேதிகளில் 5 கோவை ரயில்களின் இயக்கம் இருகூர் போத்தனூர் இடையே மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தன்பாத் -ஆலப்புழா சிறப்பு ரயில், புதுதில்லி – திருவனந்தபுரம், பெங்களூரு – எர்ணாகுளம், ஆலப்புழா – தன்பாத் சிறப்பு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு சிறப்பு ரயில் ஆகிய 5 ரயில்கள், கோவை நிலையத்திற்கு வராமல், இருகூர் -போத்தனூர் மற்றும் போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும்.
அதேபோல், 15 மற்றும் 17 ஆம் தேதிகளில், கண்ணூர் – கோவை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு வராமல், போத்தனூருடன் திரும்பிச் செல்லும். கோவை – கண்ணூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் போத்தனூர் நிலையத்தில் இருந்து கண்ணூருக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.