• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சிவசேனாபதி போட்டி !

March 12, 2021 தண்டோரா குழு

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்துத் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து இன்று மதியம் 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

எஸ்.பி.வேலுமணி தனது தொண்டாமுத்தூர் தொகுதிக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்கிறார். இதனால் திமுக அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க