March 12, 2021
தண்டோரா குழு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் மற்றும் டெபாசிட் தொகையை செலுத்தலாம்.