• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோக்கியா 5.4, மொபைல் போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது !

March 11, 2021 தண்டோரா குழு

நோக்கியா ஃபோன்களின் தலைமையகமான ஹெச்எம்டி க்ளோபல் நிறுவனம், இந்தியாவில் நோக்கியா 5.4 மொபைல்ஃபோனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் நோக்கிய.காம்/போன்ஸ் ஆகியவற்றில் ஆரம்பமாகி இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து சன்மீத் சிங் கோச்சார், துணைத் தலைவர், ஹெச்எம்டி குளோபல் கூறும்போது :-

புதிய நோக்கியா 5.4, போலார் நைட் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் செயல்திறனைப் பொறுத்தவரை, 4ஜிபி / 64ஜிபி மற்றும் 6ஜிபி / 64ஜிபி என இரு பிரிவுகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே 13,999 ரூபாய் மற்றும் 15,499 ரூபாய் ஆகும்.

மேலும் கூடுதலாக, ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தும் நோக்கியா 5.4 வாடிக்கையாளர்கள் ரூ.4,000 மதிப்புள்ள பலன்களைப் பெறலாம். உடனடியாகக் கிடைக்கும் ரூ.2,000-க்கான கேஷ்பேக், ரூ.349-க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மற்றும் கூட்டு நிறுவனங்கள் சார்பாக அளிக்கப்படும் ரூ.2,000 மதிப்புள்ள வவுச்சர்கள் இந்த சலுகையில் அடங்கும். ஏற்கனவே இருக்கும் ஜியோ சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் புதிதாக அந்த நெட்வொர்க்கில் இணைபவர்களும் இச்சலுகைகளைப் பெறலாம்.

நோக்கியா 5.4 மொபைல்ஃபோன், 48 எம்.பி க்வாட் கேமரா உடன் மேம்பட்ட நவீன ரிக்கார்டிங் திறன், சினிமா தரத்திலான எஃபெக்ட்கள், இரண்டு நாட்கள் நீடித்து உழைக்கும் பேட்டரி, க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 662 மொபைல் ப்ளாட்ஃபார்ம் 662 என வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு முழு மதிப்பளிக்கும் மொபைல்ஃபோன் ஆக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சமகால நவீன படைப்பாளிக்களுக்கென ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நோக்கியா 5.4, வளர்ந்து வரும் இளம் வீடியோக்ராஃபர்களுக்கு அட்டகாசமான, தங்குதடையில்லாத வீடியோ எடுக்கும் அனுபவத்தை வழங்குகிறது. இதன் 48 எம்பி க்வாட் கேமரா, 16 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஒஸோ ஸ்பேஷியல் ஆடியோ ஆகியவற்றினால், நோக்கியா 5.4-ல் வழங்கப்பட்டிருக்கும் சினிமா ஃபங்க்ஷன் சினிமாவை போல வினாடிக்கு 24 ப்ரேம்களில் 21:9 என்ற சினிமாட்டிக் ஃபார்மேட்டில் எடுக்க உதவுகிறது. இதன் முதன்மையான க்வாட் கேமரா, ஷட்டர் தாமதத்தை முற்றிலும் நீக்குவதால், நீங்கள் எந்தவொரு தருணத்தையும், அழகான விநாடிகளையும், குடும்ப நிகழ்வுகளையும் அருமையாக எடுக்க முடியும்.

இதன் செயல்திறனைப் பொறுத்தவரையில் மிகவும் வேகமாக இயங்க கூடியது. எந்தவித இடையூறுகளும் இல்லாமல் இயங்கும் அனுபவத்தை அளிக்கிறது. மேலும் 42 கம்யூட்களின் மூலம் நீடித்து உழைக்கும் பேட்டரியை வழங்குகிறது கம்யூட் 67 நிமிடங்கள் அதனால் பேட்டரி உங்களது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும், உங்களது மின்னஞ்சல்களை மேற்பார்வையிடவும் உதவுகிறது.

மேலும் 2020 ப்ராண்ட் ட்ரஸ்ட் ரேங்கிங்ஸ்; நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கின்றன. மேலும் மொபைல்ஃபோன் துறையில் மலிவான விலையில் மொபைல்ஃபோன்களை அப்க்ரேட் செய்திருக்கும் புதிய வரையறைக்காகவும் நோக்கியா முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க