• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இதுவரை 43 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர் !

March 11, 2021 தண்டோரா குழு

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு ராட்சச பலூன் பறக்க விடப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறுகையில்,

கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டமன்ற தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14 ம் தேதியும் இரண்டாம் கட்ட பயிற்சி 26 ம் தேதியும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கிருமி நாசனி மற்றும் கையுறைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளததாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 650 பேரில் விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான கோவை மாநகர பகுதிகளில் வாக்குச் சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 120 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் தொடர்பாக தகவல் அளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகள்,தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அப்போது தெரிவித்தார்.உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபடும் பறிமுதல் செய்யப்படும் பணம் முறையான ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்று கொள்ளலாம் எனவும் அப்போது தெரிவித்தார்.

இந்த கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் அதிகாரிகள் அலுவலர்கள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க