• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போர் வெற்றியின் பொன்விழா – இராணுவ வீரர்கள் கெளரவிப்பு

March 10, 2021 தண்டோரா குழு

1971ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதோடு, வங்கதேசம் என்ற தனிநாடு உருவாகவும் வழிவகுத்தது.

மேலும் இரண்டாம் உலகம் போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் இந்தப் போரில் சரணடைந்ததனர். இப்போரின் 50 வது பொன்விழா வெற்றி ஆண்டை, நாடு டிசம்பர் 16ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியிலிருந்து, பிரதமர் மோடி ஏற்றி வைத்த 4 வெற்றி ஜோதிகள் அப்போரில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் பெற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் விருது பெற்றவர்களின் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த பொன்விழா வெற்றி ஆண்டை முன்னிட்டு, பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி உள் அரங்கில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானம், கப்பல், தரைப்படை என முப்படை வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி ஜோதி கொண்டு வரப்பட்டு மேடையில் ஏற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து அப்போரில் பங்கேற்ற சுமார் 150 இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க