March 9, 2021
தண்டோரா குழு
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவைக்கு வந்த நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களின் பல்வேறு திட்டங்களின் சாதனை குறித்து எடுத்துரைத்தார்.
இந்த சாதனையானது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தலைமையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் சாதனை விளக்க நோட்டீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை அசோக்நகர், காந்திப்பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கும், வீடு வீடாகவும் விநியோகிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.