• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நேரு கல்வி நிறுவனங்களின் சார்பில் தேசிய மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 9, 2021 தண்டோரா குழு

நேரு கல்வி நிறுவனங்களின் சார்பில் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. துவங்கிய விழாவை,நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணக்குமார் துவக்கி வைத்தார்.

நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் டாக்டர் சைதன்யா கிருஷ்ணக்குமார் கூடியிருந்தோரை வாழ்த்திப் பேசினார். நேரு சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பிரியா சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கு தலைமை விருந்தினராக கோயம்புத்தூர், போத்தனூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திருமதி ஆர். கஸ்தூரி பங்கேற்று சமூக வலைத்தளங்கள், ஊடகங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். பெண்கள் தங்களது வாழ்க்கையிலும், பணியாற்றும் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க யோகா, தியான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் 80 பேருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரியில் உள்ள பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினரகள்.

மேலும் படிக்க