• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா

March 8, 2021 தண்டோரா குழு

கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது.

இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான இன்று பிரபல ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரபோர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

சங்கீத் ரிசர்ச் அகாடமியின் முன்னாள் மாணவியான இவர் தன் பாடல் திறமையால் பி.பி.சி விருதை பெற்றவர். இவரது தந்தை அஜோய் சக்ரபோர்த்தியும் ஹிந்துஸ்தானி பாடகர் ஆவார். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்விழாவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக யூ-டியூப்பில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க