• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக உடல் பருமன் தினத்தை ஒட்டி சைக்கிளிங் விழிப்புணர்வு பயணம்

March 7, 2021 தண்டோரா குழு

உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டும் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாடுகளை கருத்தில் கொண்டும் டாக்டர் செ. பாலமுருகன்,இந்தியன் பாரியட்ரிக்ஸ், ரோட்டரி கோவை மெரிடியன்ஸ், க்ரான்ஸ்டர்ஸ் கோயம்புத்தூர் சைக்கிளிங் நிறுவனங்கள் இணைந்து இன்று காலை 6 மணிளவில் கோவை கொடிசியா ஜென்னிஸ் கிளப்பில் 50 கிலோமீட்டர் அளவில் சைக்கிளிங் பயண விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர் செ. பாலமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த சைக்கிளிங் விழிப்புணர்வு பயணம் பொதுமக்களிடையே ஒரு நல்ல உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும்,உடல் பருமனை குறைபதற்காகவும்,மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றவும், உடல் ஆரோக்யமாக இருக்கவும் மற்றும் ஒரு எளிய உடற்பயிற்சியை நடைமுறைக்கு கொண்டுவரதற்காகவும் நடத்தப்பட்டது.

இந்த சைக்கிளிங் பயணத்தின் போது நிறுவனகள் சார்பாக மருத்துவ பாதுகாப்பு முறைகள், கை, கால், பாதுகாப்பு உரைகள், தண்ணீர், போன்ற அத்தியாவாசிய தேவைகளை பூர்த்தி செய்து இந்த சைக்கிளிங் விழிப்புணர்வு பயணம் நடத்தப்பட்டது. இறுதியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெரவிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் செ.பாலமுருகன் பேசுகையில்,

உலக சுகாதார அமைப்பு உலக உடல் பருமன் தினமாக மார்ச் 4ஆம் தேதி, 2021-ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. உலக உடல் பருமன் தினத்தை இந்த வருடம் “எல்லாருக்கும் எல்லாரும் தேவை” என்ற ஒரு விழிப்புணர்வு தலைப்பை கொண்டுவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு சில கோட்பாடுகளான உலக சுகாதார நிறுவனம் “உடல் பருமன் உள்ளவர்களுக்கு மரியாதை, கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் கொள்கை மாற்றம் தேவை என்று கூறி, மாற்றத்தை இயக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த சைக்கிளிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்றார்.

மேலும் படிக்க