• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை கோவை ஆட்சியர் எச்சரிக்கை

March 6, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், துப்பாக்கி வைத்துக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் துப்பாக்கிக்கான உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் உரியதாரர்கள் தங்களது துப்பாக்கிகளை அருகில் காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பு கிடங்கிலோ தவறாது இருப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

துப்பாக்கி உரியதாரர்கள் அனைவரும் துப்பாக்கிகளை இருப்பு வைத்துவிட்டார்களா? என்பதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட காவல் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில காவல் பணியில் உள்ளவர்களுக்கும், வங்கித்துறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கு இத்தடை உத்தரவிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க