• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்கூடத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

March 6, 2021 தண்டோரா குழு

கோவை தடாகம் சாலை உள்ள டி.வி.எஸ் நகர் பகுதியில் பத்தாண்டு காலமாக குறுந்தொழில் நடத்தி வருகின்ற தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தொழிற்கூடத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு,குறு தொழில்முனைவோர்கள் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை குறுந்தொழில் அமைப்பான டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கால் தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இதனிடையே தடாகம் சாலையில் உள்ள டி.வி.எஸ் நகர் பகுதியில் பத்தாண்டு காலமாக குறுந்தொழில் நடத்தி வருகின்ற தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் ஒன்று உள்ளது. இது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கட்டிட உரிமையாளர் தரப்பில் உள்ள பிரச்சனை காரணமாக கட்டிடத்தில் உள்ள தொழிற்கூடங்களை மூட சொல்லி ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்கும் கோர்டில் உள்ளது. இதனிடையே வாடகைதாரர் ஆன குறுந்தொழில் முனைவோரின் தொழில் கூடத்தை ஒரு கும்பல் கடந்த 2ம் தேதி நாசம் செய்தது. அதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் திரண்டு வந்தனர். காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் வந்து அச்சமயம் நடவடிக்கை எடுத்தனர். துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாலும் காவலுக்கு உட்பட்ட எல்லை பகுதி பெரும்பகுதியாக இருப்பதாலும்
இது போன்ற பிரச்சினைகள் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகள் வருகின்ற பொழுது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க