“நாட்டில் பணப் பற்றாக்குறை இல்லை என்றால், வங்கிகளில் பணப் பரிமாற்றம் ஏன் நடைபெறவில்லை” என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சமூக வலைதளத்தில் அவர் சனிக்கிழமை இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
பொதுமக்கள் தங்கள் பழைய பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக வங்கிகள் மணிக்கணக்கில் நின்று பணத்தை மாற்றிச் செல்கின்றனர். பல வங்கிகளில் பணப் பற்றாக்குறை காரணமாகப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசு பொதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில் பணப் பற்றாக்குறை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பணப்பற்றாக்குறையே இல்லை என மத்திய அரசு கூறும்நிலையில் வங்கிகளில் பணமாற்றம் செய்யாதது ஏன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது கருத்தை சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்ட ப. சிதம்பரம், “பணப்பற்றாக்குறை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.
அப்படியானால் தற்போது ஏன் வங்கிகளில் பண மாற்றம் செய்யப்படவில்லை? நம்முடைய வங்கிக் கணக்கில் உள்ள நம்முடைய பணத்தை எடுப்பதற்கு ஏன் அனுமதிக்கவில்லை? ஆயிரக்கணக்கான ஏடிஎம் மையங்கள் இதுவரை இயங்காமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்