• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடத்தில் தனியார் உணவக சமையல் அறையில் திடிரென தீப்பிடித்ததால் பரபரப்பு !

March 4, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் அருகே தனியார் உணவக சமையல் அறையில் திடிரென தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் காவல் நிலையம் அருகே சபைர் என்பருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை பணியாளர்கள் சமையல் பணிகளை துவங்கிய போது திடிரென சமையல் அறையில் இருந்து தீப்பிடித்து கரும்புகை வெளியானது.

இதையடுத்து உடனடியாக பணியாளர்கள் வெளியே வந்தனர்.இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பணியாளர்கள் உதவியோடு உள்ளே இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெளியே அகற்றினர்.

இதையடுத்து சமையல் அறையில் பிடித்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க