• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது – சுஷ்மா சுவராஜ்

November 19, 2016 தண்டோரா குழு

“சிறுநீரகங்களில் மத அடையாளம் கிடையாது” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக பாதிப்பினால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.

இந்நிலையில் சிறுநீரகம் தொடர்பாக நன்றி தெரிவித்து சனிக்கிழமை டுவிட்டர் மூலம் சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சுஷ்மாவுக்கு சிறுநீரகம் வழங்க பலரும் முன்வந்துள்ளனர்.

அவர்களில் நியமத் அலி ஷேக், ஜான் ஷா, முஜிப் அன்சாரி ஆகியோர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தங்களது சிறுநீரகங்களைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இதை ட்விட்டர் மூலமாக வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர்.

இவர்களில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஜிப் அன்சாரி, ‘நான் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். ஆனால், நீங்கள் எனக்குத் தாய் போன்றவர். உங்களுக்கு எனது இரு சிறுநீரகங்களையும் தானமாக அளிக்க விரும்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சனிக்கிழமை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், “மிக்க நன்றி சகோதரர்களே, சிறுநீரகத்துக்கு மத முத்திரை எதுவும் கிடையாது என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிறுநீரகத்தைத் தானமாக தர முன்வந்த நண்பர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்த சுஷ்மா ஸ்வராஜ், “மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன்” என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

மேலும் படிக்க