March 2, 2021
தண்டோரா குழு
மதுபான கடத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக உதவி மேலாளர்(கணக்கு) அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு சரிதா (தொலைப்பேசி எண்- 9788177068), கோவை தெற்கு லட்சுமி (9344121629) ஆகியோர் சிறப்பு அலுவலர்களாக நியமனம். துணை ஆட்சியர் கனகராஜ் (9445029759) தலைமையில் பறக்கும் படை அமைப்பு. பறக்கும் படையில் இளநிலை உதவியாளர்கள் மகேஸ்பாபுசிங் (9843415501), பாலமுருகன்(9842135622), ஜாஹீர் உசன்(8248999735), அருள்தாஸ்(9943040052) ஆகியோர்கள் உள்ளடங்கிய பறக்கும் படை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணான மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள சிறப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்களுக்கு தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.