• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 788 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – மாவட்ட ஆட்சியர்

March 2, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 788 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை_ கடந்த தேர்தலை விட கூடுதலாக 1085 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராசாமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

மாநகர் மாவட்ட பகுதிகளில் விளம்பரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளுக்கு பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 64650 பேர் இருக்கின்றனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் இருக்கின்றனர். இவர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரொனா பாதிக்கப்பட்டவர்களும் தபால் வாக்கினை செலுத்த நடவடிக்கை 1050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி வீதம் 4467 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தபட்டுள்ளது. கடந்த தேர்தலை விட 1085 வாக்கு சாவடிகள் 106 இடங்களில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது
வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் கோவை மாவட்டத்தில்பதற்றமான வாக்கு சாவடிகள் 788 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வாக்கு சாவடிகள் 112 இடங்களில் உள்ளது. இவை பெருவாரியாவை மாநகராட்சி பகுதிகளில் உள்ளது கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் வாக்கு சாவடிகள் எதுவும் இல்லை வெளிப்படையாக தேர்தல் நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் இது வரை 85 புகார்கள் வந்துள்ளது அரசு துறை அதிகாரிகள் மீது புகார் இருந்தாலும் நேரடியாக புகார் அளிக்கலாம். பாரபட்சம் இல்லாமல் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொறுப்பில்லாமல் செயல் பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வீல் சேர் வழங்கப்படும் பணம் எந்த வகையிலும் கொடுக்க கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது.சுமார் 50 வாக்கு சாவடிகள் வரை வன எல்லைகளில் இருக்கின்றது.கோவை மாவட்டம் கேரள எல்லையில் இருப்பதாலும் , தேர்தல் விவகாரங்கள் குறித்து பாலக்காடு , திருச்சூர் மாவட்ட நிர்வாகங்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட இருக்கின்றது என்றார்.

மேலும் படிக்க