March 1, 2021
தண்டோரா குழு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்மாநகராட்சி கமிஷனர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாநகராட்சியின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும்,மாநகர மக்களின் ஒத்துழைப்பினாலும் தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்த நிலையில் உள்ளது. கொரோனா பரவுதலை தடுக்க கொரோனா நோய் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்வது அவசியமானதாகும்.
மேலும் தற்போது கொரோனா தாக்கம் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இத்த டுப்பூசியானது இலவசமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதில் தனிகவனம் செலுத்தி, கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் சமூகத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.