March 1, 2021
தண்டோரா குழு
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே தனது தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையொட்டி சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெறவும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் மத்திய தொழில்துறை காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை கண்ணப்ப நகர் பகுதியில் கோவை மாநகர காவல்துறை சார்பில் மத்திய தொழிற்படை காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மாநகர காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினர். இதில் கோவை மாநகர் காவல் ஆணையர் சுமித் சரண் துவக்கி வைத்தார்.
அணிவகுப்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய வாறு கலந்து கொண்டனர்.