• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குதிரைகள் அணி வகுப்பு போட்டி

February 27, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குதிரைகள் அணி வகுப்பு போட்டிகளில் குதிரைகள் நடத்திய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு,கேரளா,கர்நாடாகா,ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய அளவில் பிரபலமான குதிரைகள் அணி வகுப்பு கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் , தமிழ்நாடு இண்டிஜீனியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பாக துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியினை முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.ஒருங்கிணைப்பாளர் சக்தி பாலாஜி ஒருங்கிணைத்த இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த குதிரைகள் ஒய்யாரமாக நடை நடந்து,

குதிரை வீர்ர்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு,நடனம் ஆடுவது,உயரம் தாண்டுவது என பல்வேறு சாகசங்களை செய்தன. இரண்டாவது நாளாக நடைபெற்ற அணிவகுப்பு விழாவில் ஜே.ஆர்.டி.ராஜேந்திரன்,வின்னர்ஸ் இந்தியா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டு வரும் குழந்தை பருவ மாணவ, மாணவியர்களும்,வீரர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்கும் வகையில் குதிரையில் அமர்ந்தபடி சாகசம் செய்து அசத்தினர்.

பால் பல் குதிரைகள்,2 பல் குதிரைகள், 4 பல் குதிரைகள் என்ற பிரிவுகளில் நடைபெற்ற இதில்,இந்திய வகை குதிரைகளான சிந்தி, மார்வாரி உள்ளிட்ட பல்வேறு ரக குதிரைகள் கலந்து கொண்டன.

மேலும் படிக்க