• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

February 23, 2021 தண்டோரா குழு

உதவி தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகைவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவ்வமைப்பினர் கூறுகையில்,

21 வகையாய் மாற்று திறனாளிகள் உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 1000 ரூபாய் உதவி தொகையை கேரளா,தெலுங்கானா மாநிலத்தில் வழங்கபடுவதை போல 3000 ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும் என்றனர்.மேலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ள கடும் சிரமத்திற்கு உள்ளாவதால் இலவச வீடுகள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் வீடு வீடாக சென்று மாற்று திறனாளிகள் உள்ளனரா என முறையான கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபட வேண்டும் எனவும் அரசு வேலை வாய்ப்பில் 3% உள்ளதை நான்கு சதவீதமாக உயர்த்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். நாற்பது சதவீதம் குறைபாடு இருந்தாலே உதவிகள் வழங்கிட வேண்டும் என சட்டம் உள்ளதாக தெரிவித்தனர்.

தமிழக அரசின் இன்றைய பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது எனவும் தனித்துறை அமைத்து மாற்று திறனாளிகள் முழுமையாக பலன் அடைய வேண்டும் எனபதே நோக்கம் எனவும் தெதிவித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்து இன்றைய தினம் நாற்பதுக்கும் மேற்பட்டோர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க