• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டாமுத்தூரில் ரூ.16.13 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு !

February 22, 2021 தண்டோரா குழு

ரூ.16.13 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பேரூராட்சி மோளப்பாளையம், நாதேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் தென்னமநல்லூர், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.16.13 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க