• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின்

February 19, 2021 தண்டோரா குழு

கோவையை அடுத்த காரமடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கூடலூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நம்பிக்கையில் மக்கள் என்னிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மனு அளித்தவர்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்ட பதிவெண் கொண்ட அட்டையை மக்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அட்டையை காண்பித்து கோட்டைக்குள்ளே வந்து முதல்வர் அறையில் தரலாம்.இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பார்க்கவில்லை மாநாடு போல் உள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த சட்டமன்ற தொகுதி பகுதிகளிலேயே வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி நடக்கும் போது முறைப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எந்த முறைகேடும் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மலைவாழ் பகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் மின்சார கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே அளவு அவரது மகன் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கப்பார். தாயகம் திரும்பி தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். காரமடை பகுதியில் உள்ள கருவேப்பில்லை விவசாயிகளுக்கு கருவேப்பில்லை தொழிற்சாலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த தொழிற்சாலை அமைத்து தரப்படும். கருவேப்பில்லைக்கு நல்ல விலை கிடைக்கவும் சந்தைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.

கோவையில் பல விசியங்கள் மர்மமாக உள்ளது. உள்ளாட்சித்துறையின் முக்கிய பணியே குடிநீர் விநியோகம் தான். ஆனால் அதனை கூட தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. வெளிநாட்டில் உள்ள சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 72 வார்டுகளில் இந்த நிறுவனம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. கோவையில் தேவையில்லாத இடங்களில் மேம்பால பணிகள் கட்டப்பட்டு வருகிறது. அமைதிற்கு பெயர் போன கோவையில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவிற்கு ஆளுமை திறன் இருந்தது. ஆனால் அத்தகைய ஆளுமை திறன் இல்லாதவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சிறுபான்மையினர் குடியுரிமை சட்டம், புதிய வேளாண்மை சட்டம் போன்றவற்றை மத்திய அரசு தமிழக அரசிடம் திணிக்கிறது. தமிழக அரசு அதனை ஆதரிக்கிறது.

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எக்கு கோட்டை என துணை முதல்வர் பன்னீர் செல்வம் சொல்லியுள்ளார். அந்த எக்கு கோட்டையில் ஒட்டை போட்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பல லட்சம் வாங்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.காலமெல்லாம் மனிதன் வாழக்கூடிய திட்டத்தை கொடுத்தது திமுக ஆட்சிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வாங்கப்பட்ட மனுக்கள் மேடையில் வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பெட்டிக்கு சீல் வைத்தார். இந்த பெட்டியில் அண்ணா அறிவலாயத்திற்கு அனுப்பப்பட்டது. திமுக ஆட்சிக்கு இந்த பெட்டிகள் திறக்கப்பட்டு மனுக்கள் மீது நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் முபாரக், சி.ஆர் ராமசந்திரன், ஒன்றியப்செயலாளர் அறிவரசு மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க