• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை உடைத்து இதனை குழி தோண்டி புதைப்போம் – ஸ்டாலின்

February 19, 2021 தண்டோரா குழு

கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை உடைத்து இதனை குழி தோண்டி புதைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது திமுக தொண்டர்களிடம் மனுக்களை பெற்று கொண்ட அவர் திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யபட்டு 100 நாட்களில் அனைத்து பிரச்சனைகளக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். தீர்க்கபடாத பிரச்சினைகள் இருப்பின் நேரடையாக கோட்டைக்கே வந்து ரசீதுடன் வந்து முதல்வரின் அறையில் இதுகுறித்த கேட்கலாம் எனவும் தெரிவித்தார்.தேர்தலுக்காகவும் அரசியலுக்காக மட்டும் வருபவன் தானில்லை என்றவர் எப்போதும் உங்களுடன்இருப்பவன் நான் என்றார்.

அதிமுக செய்ய தவறிய கடமையை திமுக அரசு மக்களுக்கு செய்து கொடுக்கும். இதனால் ஒரு கோடி குடும்பங்கள் பலன் அடைவார்கள்.
இப்போது நடப்பது அரசே அல்ல ஊழல்வாதிகள் இணைந்து ஊழல் கோட்டையை ஏற்படுத்தியுள்ளனர்.இதில் முக்கியமானவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.சுண்ணாம்பு பவுடர்,பினாயில் என அனைத்திலும் ஊழல் செய்தவர் வேலுமணி என்றார்.

மேலும், ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம் 12500 ஊராட்சிகளில் 12500 கோடி ரூபாய் அமைச்சர் வேலுமணி ஊழல் செய்து இருக்கின்றார். சமீபத்தில் வாழும் காமராசர் என எடப்பாடியை வேலுமணி புகழ்ந்து உள்ளாார். இதை விட பெரிய அவமானம் காமராசருக்கு இல்லை என தெரிவித்தார்.ஆளுங்கட்சியை சேர்ந்த கான்டிராக்டர்கள் கூட ஒப்பந்தங்களில் நுழைய முடியாதபடி வேலுமணி தனக்கு வேண்டியவர்களுக்கு கான்டிராக்ட் பெற்று கொடுக்கின்றார் எனவும் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன்தான் கோவையில் அமைச்சர் போல செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

ஒப்பந்தம் பெறபட்ட அமைச்சர் வேலுமணி வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் ஆரம்பத்தில் 17 கோடியாக இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளது.ஊழல் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மிரட்டபடுகிறார்கள். அதிமுக அரசின் ஆராஜகம் முடிகின்ற நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது. மக்களிடம் வரிபணத்தை கொள்ளையடித்து மக்களுக்கே இலவசம் என்ற பெயரில் கொடுப்பது அசிங்கமாக இல்லையா வேலுமணி என கேள்வி எழுப்பினார்.

மேலும், விரைவில் ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும். இந்த ஆட்சி அகற்றபடவும் அராஜகத்திற்கு முடிவு கட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வெண்டும். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை உடைத்து இதனை குழி தோண்டி புதைப்போம்.திமுகதலைவர் கருணாநிதி மறைந்த போது அவரை அடக்கம் செய்ய இடம் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் 6 அடி இடம் கொடுக்க மறுத்தார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க