February 19, 2021
நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி,நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா,
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ரவிமரியா, இசையமைப்பாளர் இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து,
தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.