• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திறன் போட்டிகள்

February 18, 2021 தண்டோரா குழு

கோவை துடியலூரை அடுத்த வட்டமலை பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திறன் போட்டிகள் இணைய வழியாக நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை, துடியலூர் அருகில் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான “கிரியா பெஸ்ட்-2021” என்ற தலைப்பில் கலைத்திறன் போட்டிகள் இணைய வழியாக நடைப்பெற்றது.

இதில் கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி-வினா மற்றும் புகைப்படம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர். இதைதொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.என்.உமா அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க நிர்வாகி ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீஷ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசும்போது “மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் பொது அறிவு சார்ந்த தகவல்களை அதிகமாக படிக்க வேண்டும். இது போன்ற தகவல்கள் பிற்காலத்தில் வேலை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.”

விர்ச்சுவல் முறையில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் கவுண்டம்பாளையம், அரசு உயர்நிலை பள்ளி மாணவி திவ்யலட்சுமி முதல் பரிசும், ராமநாதபுரம், டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் நிதிஷ் இரண்டாம் பரிசும், ஆவரம்பாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி காவ்யா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

ஓவிய போட்டியில் சுண்டபாளையம், அரசு மேல்நிலை பள்ளி மாணவர் வேதாந்த் முதல் பரிசும், டாக்டர்.பி.ஜி.வி மெட்ரிக் பள்ளி மாணவி கேரன் ஜெனிஷா இரண்டாம் பரிசும், வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் அபிஷேக் மூன்றாம் பரிசும் பெற்றனர்.பேச்சு போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி கிருத்திக் நேத்ரா முதல் பரிசும், குனியமுத்தூர் நிர்மலமாதா கான்வென்ட் பள்ளி மாணவி ருத்ரஸ்ரீ இரண்டாம் பரிசும்,நேஷனல் மாடல் மேல்நிலை பள்ளி மாணவி சாமுத்ரிகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வினாடி- வினா போட்டியில் கோவை, விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் லலித் கிஷோர், சுதேக்சன் ஆகியோர் முதல் பரிசும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பப்ளிக் பள்ளி மாணவர் ஆயுஷ்குமார், நிஷா குமாரி ஆகியோர் இரண்டாம் பரிசும், ஊட்டி செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவிகள் ரம்யா மற்றும் ஹரிணி ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.புகைப்பட போட்டியில் பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளி மாணவர் நிக்யுண் முதல் பரிசும், கோவை,நேஷனல் மாடல் மேல்நிலை பள்ளி மாணவர் ஸ்ரீராம் இரண்டாம் பரிசும், ,தஞ்சாவூர் தாமரை இன்டர் நேஷனல் பள்ளி மாணவி மதிமலர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.விழாவின் இறுதியாக துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் படிக்க