February 17, 2021
தண்டோரா குழு
கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பீல் புதிய எரிவாயு தகன மேடை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஷாஜ் கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலையும், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எரிவாயு தகன மேடையையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளர்கள் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆணைகளை நான்கு அலுவலர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.