February 16, 2021
தண்டோரா குழு
கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியூ அமைப்பினர் முட்டிப்போட்டபடி சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது 25 க்கும் மேற்பட்டோர் சாலையில் முட்டி போட்டபடி சென்று மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல செய்தனர்.