February 16, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர் சமூகநீதி தொழிற்சங்கம் சார்பாக 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 ஆண்டு காலம் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தகுதி உள்ள தூய்மை பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். தூய்மை பணிக்காக நியமனம் செய்த 325 பணியாளர்களை தூய்மை பணிக்கே திரும்ப அனுப்ப வேண்டும். உக்கடம் சி.எம்.சி காலனியில் இருந்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் குடும்பத்திற்கு மீண்டும் அதே இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.