• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாணவ,மாணவிகளின் கல்வி மற்றும் உலக நலன் வேண்டி சிறப்பு யாகங்கள்

February 14, 2021 தண்டோரா குழு

கோவையில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் மாணவ,மாணவிகளின் கல்வி மற்றும் உலக நலன் வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

கோவை காந்திமா நகர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோவில். கொங்கு மண்டலத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு தனி சன்னதி எனும் சிறப்பு பெற்ற இந்த வளாகத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.குறிப்பாக மாணவ , மாணவிகளுக்கு கல்வி , கேள்வி,ஞானம்,பக்தி ஏற்படவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும் , ஞாபக சக்தி கூடவும் தேர்வு பயம் நீங்கவும் , உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் , ஸ்ரீ லட்சுமி யாகம், தொழில் விருத்தி, பரிகாரம் ,செல்வ வளம்,உலக மக்கள் நலன் , திருமண தடை விலக,ஆயுள் வேண்டியும்,ஆரோக்யம் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரின் நலன் கருதி,ஸ்ரீ மகாலட்சுமி யாகம்,தன்வந்திரி யாகம்,ஸ்ரீசுதர்சன யாகம் நடைபெற்றது.

ஸ்ரீமகாகணபதி உபாசகர் கல்யாணராமன் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக, சுப்ரபாத சேவை,கோ பூஜை,இரண்டாம் கால பூஜை செய்து பின்னர்,பஞ்ச சக்தி பாராயணம்,மூலமந்த்ரா,காயத்ரி மந்த்ரா பாராயாணம் செய்யப்பட்டு சிறப்பு யாகங்களுக்கான ஹோமம் வளர்த்து யாக பூஜைகள் நடைபெற்றது. இதில்,
கோவில் தலைவர் முருகன்,துணை தலைவர் சரஸ்வதி ,செயலாளர் கர்ணன் மற்றும் நிர்வாகிகள்,மல்லிகா சண்முககுமார் , ராஜலக்ஷ்மி சேகர், வெங்கடாசலம், கோவிந்தராஜ்,கண்ணன்,வெங்கடேஷ், சண்முகம், சண்முககுமார், கவிதா தண்டபாணி, அம்சா பார்த்திபன்,மணிமேகலை செல்வராஜ், ஈஸ்வரி மோகனசுந்தரம், பெரியநாயகி சிவராமன்,சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் சிறப்பு யாகங்களுடன் பூஜை செய்யப்பட்ட கல்வி உபகரணங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க