February 13, 2021
தண்டோரா குழு
ஊராட்சி அலகில் காலியிடங்களுக்கு
16ம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த டிசம்பர் 11ம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேலும், வரும் 16ம் தேதி அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும் என விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.