February 13, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனுக்குடன் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி சுமார் 6 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.இதில் தற்போது வரை 6 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற 10 லட்சத்து 17 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.இதில் 99 சதவீதம் பேருக்கு பெங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது.
9 ஆயிரம் பேர் மட்டுமே பொங்கல் பரிசு வாங்காமல் உள்ளனர்.இவர்கள் இடம் பெயர்ந்து சென்றவர்களாக இருக்கலாம்.அல்லது பொங்கல் பரிசை வாங்க விருப்பம் இல்லாதவர்களாக இருக்கலாம்.பொங்கல் பரிசு உள்ளிட்டவற்றை வாங்க விருப்பம் இல்லாதவர்கள் இணையதளம் சென்று அதனை பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு செய்து உள்ளது. ஆனால் கோவையில் இதுவரை தனக்கு பொங்கல் பரிசு வேண்டாம் என்று யாரும் பதிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.