• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘வாழ்க்கையில் சொல்லப்படாத பாதைகள்’ புத்தகம் கோவையில் வெளியீடு

February 12, 2021 தண்டோரா குழு

மனித உணர்வுகளோடு பின்னிபிணைந்த 75 கவிதைகள் கொண்டுள்ள வெர்ஷா சவுத்ரி எழுதிய வாழ்க்கையில் சொல்லப்படாத பாதைகள் என்ற புத்தக வெளியீட்டு விழா கோவை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் அரங்கில் வெளியிடப்பட்டது.

வர்ஷா சவுத்ரி, கோவை அருகே உள்ள திருப்பூரை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவியாக உள்ளார். வணிக பொருளாதாரம் மற்றும் நிதி துறை கல்வி படித்து வருகிறார். புத்தக ஆசிரியர் வெர்ஷா சவுத்ரி 11 வயது முதல் புத்தகங்களை எழுதி வருகிறார். நீண்ட நாட்களாக அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பில் குறிப்பிட்ட கருத்துக்கள் இல்லாமல் பல்வேறு வகையாக இருப்பதால் இப்புத்தகத்தை அன் டோல்டு பாத் ஆப் லைப் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கையில் அழகானவற்றையும், அதற்கும் மேல் உள்ள மனிதன் தன் கண்களால் காணாத உணர்வுகளையும் அன்டோல்டு பாத்ஸ் ஆப் லைப் என்ற புத்தகத்தில் படமாக்கியுள்ளார். இந்த தலைப்பு, உத்வேகத்தையும், புத்துணர்வையும், செயல்வடிவமுள்ளதாகவும், சிந்தனையை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த புத்தகம், பிளிப்கார்ட், அமெசான் மற்றும் நோஷன் பிரஸ் அதிகாரப்பூர்வமான இணையத்தளங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க