• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாரி வாடகை 20 சதவீதம் உயர்வு கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

February 10, 2021 தண்டோரா குழு

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தியுள்ளோம் என கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த ஆண்டு மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இருந்தன. அதன் பின் கடந்த ஜுன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர துவங்கியது. தற்போது பெட்ரோல் விலை ரூ.90 ஆகவும், டீசல் விலை ரூ.83 ஆகவும் உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் அதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம்,தொழில்துறைக்கு அடுத்து சரக்கு போக்குவரத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. தற்போது வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து தொழில் தடுமாறும் நிலையில் உள்ளது. விலை உயர்வால் கடந்த 6 மாதங்களாக சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக வேறு வழியின்றி சரக்கு போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளோம். இதனால் காய்கறி, மளிகை மற்றும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவந்தால் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த லாரி வாடகை உயர்வுக்கு பொதுமக்களும், தொழில் துறையினரும் ஆதரவு தந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முருகேசன் கூறினார்.

மேலும் படிக்க