• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி – 1000 மாடுகள் 900 வீரர்கள் பங்கேற்க ஏற்பாடு

February 9, 2021 தண்டோரா குழு

கோவையில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஆயிரம் மாடுகள் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான கால்கோள் விழா செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

2018 ஆம் ஆண்டு முதல் கோவையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நான்காம் ஆண்டில் சிறப்பாக நடை பெறுவதாகவும் இந்த ஆண்டில் ஆயிரம் மாடுகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மாருதி கார் பைக் மற்றும் தங்க நாணயங்கள் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.சிறந்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடை பெறுவதாகவும் இந்த ஆண்டு 5 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில், நல்லறம் அறக்கட்டளை தலைவர் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு தலைவர் எஸ் பி அன்பரசன், செயலாளர் தங்கராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க