• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவக்கம்

February 8, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 9_வது அண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்கியது. முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு பழங்களை உணவாக வழங்கினர். முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என 26 யானைகள் பங்கேற்றுள்ளன. இதற்காக யானைகள் லாரிகள் மூலம் முகாம் நடைபெறும் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு அழைத்து வரப்பட்டன.

48 நாட்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு பவானி ஆற்றங்கரையில் ஷவர் குளியலுடன் ஊட்டச்சத்து மாவு கலவை, பசுந்தீவனம் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகின்றன.மேலும் மருத்துவ பரிசோதனையுடன், தினசரி நடைப்பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.அதேபோல் யானையுடன் வரும் பாகங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தபட்டுள்ளதுடன் அவர்களுக்கு யானை பராமரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

இன்று முகாமிற்கு வந்த யானைகள் மீண்ட இடைவேளைக்கு பிறகு ஒன்றை ஒன்று சந்தித்த கொண்ட நிலையில் பாசத்தை வெளிப்படுத்தி கட்டி தழுவி கொள்கின்றன. கோவில்களில் காண்கிரீட்தரைத் தளத்தில் கட்டப்படும் யானைகள் இங்கு மண் தரையில் கட்டிய மகிழ்ச்சியில் தலையில் மண்ணை வாரி இறைத்து மண் குளியல் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

மேலும் படிக்க