• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக தலைமையகம் செல்வீர்களா? சசிகலாவின் பதில்!

February 8, 2021 தண்டோரா குழு

நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என சசிகலா கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகிய சசிகலா இன்று பெங்களூருவில் இருந்து கார் மூலம் தமிழகம் வந்தார். இதற்கிடையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் வாணியம்பாடியில் காரில் அமர்ந்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை.கொள்கைக்கு நான் அடிமை. ஆனால் அடக்கு முறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்.

நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

மேலும், அதிமுக தலைமையகம் செல்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதிலளித்தார்.

மேலும் படிக்க