February 6, 2021
தண்டோரா குழு
கோவையில் பாரம்பரியமிக்க அத்தார் ஜமாத் மகாசபை தேர்தல் தொடர்பான ஆலோசணை கூட்டத்தில் இந்த மாதம் மகாசபையும் மற்றும் தேர்தலை நடத்த வேண்டும் என அத்தாரியா நலம் நாடும் வளர்ச்சி கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
பாரம்பரியமிக்க கோயமுத்தூர் அத்தார் ஜமாத் மகாசபையின் 2021 -2022 ம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மகாசபை தேர்தலில், கோயமுத்தூர் அத்தார் ஜமாத் வெல்ஃபேர் அசோசியேஷன், அத்தாரியா வளர்ச்சி குழு, கோயமுத்தூர் அத்தாரியா ஐக்கிய முன்னேற்றக் குழு,ஆகிய மூன்று அணிகள் இணைந்து “அத்தாரியா நலம் நாடும் வளர்ச்சி கூட்டமைப்பு” என ஒரே அணியாக போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான ஆலோசணை கூட்டம் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜியார் இஸ்மாயில், மற்றும் பீர் முகம்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,அத்தர் ஜமா அத் மகாசபை தேர்தலை இந்த மாத இறுதிக்குள் நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த ஆலோசணை கூட்டத்தில்,இதில் அத்தாரியா நலம் நாடும் வளர்ச்சி கூட்டமைப்பின், அல்வா ரஃபி, சிட்டுக்குருவி யூசுப், லேனா சிக்கந்தர், சாதிக், சிட்டுக்குருவி நிஜாம், வாத்தியார் அமானுல்லா, நவாஸ், முன்னாள் துணைத் தலைவர் செய்யது உசேன், முன்னாள் கேசியர் சாகுல் அமீது, துணைத் தலைவர் பீர் முகமது, பொருளாளர் ஆசிக் அலி, கமிட்டி உறுப்பினர்கள் ஆசிக் அஹமது, ஜான்ஷா, முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள் அனிபா, அன்வர், மற்றும் மகாசபை உறுப்பினர் அசாருதீன்,உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.